டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா பாதிப்பு

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு  கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

லேசான அறிகுறிகள் உள்ள நிலையில் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை மேற்கொண்டு தனிமை படுத்திக்கொள்ள வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.