டெல்லியில் கடும் பனி மூட்டம் – ரெயில்கள் தாமதம்

தலைநகர் டெல்லி உள்பட வடமாநிலங்களில் காலை வேளையில் கடுமையான பனி மூட்டம் நிலவுகிறது.  சில அடி தூரங்களே கண்ணுக்கு புலப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

டெல்லியில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் ஆகவும் அதிகபட்ச வெப்ப நிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

டெல்லியில் பனிமூட்டம் காணப்படும் நிலையில், காற்றின் தரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 347 – அதாவது மிகவும் மோசம் என்ற நிலையில் இருப்பதாக காற்று தரம் மற்றும் காலநிலை ஆய்வு அமைப்பு தெரிவித்தது.  பனிமூட்டம் காரணமாக 4 ரெயில்களும் தாமதமாக வருவதாக வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.