டி20 பேட்ஸ்மேன் தரவரிசை – இங்கிலாந்து வீரர் புதிய சாதனை

தென்ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று இங்கிலாந்து தொடரை கைப்பற்றியது.

இந்த மூன்று போட்டிகளிலும் 19, 55 மற்றம் 99 என ரன்கள் விளாசி இங்கிலாந்து பேட்ஸ்மேன் தாவித் மலன் முத்திரை பதித்தார். ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடைசி ஐந்து போட்டிகளில் நான்கு அரைசதங்கள் விளாசியுள்ளார். மேலும், நியூசிலாந்துக்கு எதிராக 103 ரன்கள் அடித்துள்ளார்.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சிறப்பாக விளையாடியதன் மூலம் ஐசிசி-யின் டி20 போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடம் பிடித்துள்ளார். ஏற்கனவே பாகிஸ்தான் பேட்ஸ்மேன் பாபர் அசாம் முதல் இடத்தில் இருந்தார். தற்போது தாவித் மலன் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

தாவித் மலன் 915 புள்ளிகள் பெற்றுள்ளார். இதுவரை டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஆரோன் பிஞ்ச் (2018 ஜூலை) 900 புள்ளிகள் பெற்றதுதான் சாதனையை இருந்தது. தற்போது தாவித் மலன் 915 புள்ளிகள் பெற்றுள்ளார். பாபர் அசாம் 44 புள்ளிகள் பின்தங்கியுள்ளார்.