டி20 தரவரிசை பட்டியல் – முதலிடத்தில் நீடிக்கும் இந்தியா

டி20 கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் அணிகளின் புதிய தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. நேற்று முன்தினம் வெளியிட்டது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை வென்ற இந்திய அணி (268 புள்ளிகள்) ஒரு புள்ளி அதிகரித்து முதலிடத்தில் நீடிக்கிறது.

2-வது இடத்தில் இங்கிலாந்து (261 புள்ளி) உள்ளது. தென்ஆப்பிரிக்கா (258 புள்ளி) 3-வது இடத்திலும், பாகிஸ்தான் (258 புள்ளி) 4-வது இடத்திலும், நியூசிலாந்து (252 புள்ளி) 5-வது இடத்திலும் தொடருகின்றன.

இந்தியாவுக்கு எதிரான தொடரை இழந்த ஆஸ்திரேலியா (250 புள்ளி) ஒரு புள்ளி குறைந்து 6-வது இடத்திலும், வெஸ்ட்இண்டீஸ் (241 புள்ளி) 7-வது இடத்திலும், இலங்கை (237 புள்ளி) 8-வது இடத்திலும், வங்காளதேசம் (224 புள்ளி) 9-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் (219 புள்ளி) 10-வது இடத்திலும் உள்ளன.