டி20 கிரிக்கெட் தரவரிசை – 21 இடங்கள் முன்னேறிய தினேஷ் கார்த்திக்

டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலை நேற்று ஐசிசி வெளியிட்டது. பேட்டிங் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களை பொறுத்தவரை இந்திய அணியில் இஷான் கிஷன் மட்டுமே இடம் பெற்றுள்ளார்.

சொந்த மண்ணில் நடந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அவருக்கு 6-வது இடம் கிடைத்துள்ளது. 6-வது இடத்தை ஆஸ்திரேலியா வீரர் கான்வேவுடன் இஷான் கிஷன் பகிர்ந்துள்ளார்.

முதல் இரண்டு இடத்தில் பாகிஸ்தான் வீரர்கள் உள்ளனர். பாபர் ஆசம் முதல் இடத்திலும் ரிஷ்வான் இரண்டாவது இடத்திலும் தொடர்கின்றனர். இலங்கை அணி வீரர் நிசாங்கா ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி நிலையில் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது. தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் ஐசிசி பேட்டிங் தரவரிசையில் 21 இடங்கள் (108-ல் இருந்து 87) முன்னேறி உள்ளார்.

டி20 கிரிக்கெட்டின் பந்து வீச்சு தரவரிசையில் இந்திய அணி வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை. இந்தியா தென் ஆப்பிரிக்கா தொடரில் சொதப்பிய நோர்க்கியா ஒரு இடம் பின் தங்கி 7 இடத்திற்கு தள்ளப்பட்டார். ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக பந்து வீசிய ஹசரங்கா ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஹசில்வுட் முதல் இடத்தில் தொடர்கிறார். டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் இந்திய அணியின் அஸ்வினை பின்னுக்கு தள்ளி வங்களாதேச வீரர் சகீப்-அல்-ஹசன் 2-இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் இந்திய அணி வீரர் ஜடேஜா தொடர்கிறார்.