டி20 உலகக்கோப்பைக்கான அணியில் இடம் பிடித்த ஷர்துல் தாகூர்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. விராட் கோலி தலைமையிலான இந்த அணியில் 15 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். அவர்களில் 2 பேர் காயமடைந்து இருப்பதாக தகவல் வெளியானது. ஹர்திக் பாண்ட்யா ஐ.பி.எல். போட்டியில் பந்து வீசவில்லை.

இந்நிலையில், டி20 உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டரான ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார். அக்சர் பட்டேலுக்குப் பதில் அவர் சேர்க்கப்பட்டிருக்கிறார். அக்சர் பட்டேல் மாற்று வீரர்கள் பட்டியலில் உள்ளார். காயத்தில் இருந்து சமீபத்தில் குணமடைந்த ஹர்திக் பாண்ட்யா தனது இடத்தை தக்க வைத்துள்ளார்.

அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாகூர், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி.

மாற்று வீரர்கள்: ஸ்ரேயாஸ் அய்யர், தீபக் சாஹர், அக்சர் பட்டேல்.