டிராவிட் சாதனையை முறியடித்த விராட் கோலி!
ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. புஜாரா சதம் அடித்தார். விராட் கோலி 82 ரன்னில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
என்றாலும் 82 ரன்கள் அடித்ததன் மூலம் வெளிநாட்டு மண்ணில் ஒரே ஆண்டில் அதிக ரன்கள் குவித்த ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடித்தார்.
ராகுல் டிராவிட் கடந்த 2002-ம் ஆண்டில் வெளிநாட்டு மண்ணில் 1137 ரன்கள் குவித்திரந்தார். தற்போது கோலி 1138 ரன்கள் சேர்த்து டிராவிட் சாதனையை முறியடித்துள்ளார்.