டிசம்பர் 7 ஆம் தேதி அதிமுக உள்கட்சி தேர்தல் – தலைமை அறிவிப்பு

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், இன்று உட்கட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டள்ளது. 3-ம்தேதி (வெள்ளிக்கிழமை) வேட்பு மனுத்தாக்கல் நடைபெறுகிறது. 4ம் தேதி காலை 10 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை திரும்பப்பெற 6-ம்தேதி கடைசி நாள் என்று அ.தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. உட்கட்சித் தேர்தல் 7.12.2021 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. வரும் 8-ம்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அன்றே முடிவுகள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.