Tamilவிளையாட்டு

டிஎன்பிஎல் கிரிக்கெட் – தூத்துக்குடியை வீழ்த்தி சேப்பக் சூப்பர் கில்லீச் வெற்றி

டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் நேற்றைய லீக் ஆட்டம் திருநெல்வேலியில் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும், சேப்பக் சூப்பர் கில்லீஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் தொடக்க ஆட்டக்காரர் கோபிநாத் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 53 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், சேப்பாக் சூப்ப்ர் கில்லீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 19.3 ஓவரில் 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

தூத்துக்குடி சார்பில் கார்த்திக் சண்முகம் 3 விக்கெட், தமிழ்க்குமரன், பூபாலன், அதிசயராஜ் டேவிட்சன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 128 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தூத்துக்குடி களமிறங்கியது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்கள் துல்லியமாக பந்து வீசி அசத்தினர்.

தூத்துக்குடி அணியில் அக்‌ஷய் ஸ்ரீனிவாசன் ஓரளவு தாக்குப்பிடித்து 35 பந்தில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. இறுதியில், தூத்துக்குடி அணி 95 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, சேப்பாக் அணி 32 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சேப்பாக் அணி சார்பில் ஹரீஷ் குமார் 3 விக்கெட்டும், விஜய் சங்கர், பெரியசாமி, சித்தார்த் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *