Tamilசினிமா

டாப்ஸியின் ‘கேம் ஓவர்’ ஜூன் 14 ஆம் தேதி ரிலீஸ்

`மாயா’, `இறவாக்காலம்’ படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் அடுத்ததாக டாப்சியை வைத்து `கேம் ஓவர்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் வெளியான படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில், படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும் படம் வருகிற ஜூன் 14-ந் தேதி திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் டாப்சி வித்தியாசமான கேம்களைத் தயாரிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வினோதினி வைதிநாதன், அனிஷ் குருவில்லா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரான் ஈதன் யோஹன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு ஏ.வசந்த் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரிச்சர்ட் கேவின் படத்தொகுப்பை கவனிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *