ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை – இந்திய அணி காலியிறுதிக்கு முன்னேற்றம்

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணி நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் போலந்து அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய வீரர்கள் துவக்கம் முதலே எதிரணிக்கு வாய்ப்பு கொடுக்காமல் கோல் அடித்தனர். இறுதியில் 8-2 என்ற கோல்கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.

முதல் இரண்டு போட்டிகளில் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்திய துணை கேப்டன சஞ்சய், இன்றைய ஆட்டத்தில் இரண்டு கோல்கள் அடித்தார். ஹூண்டால் 2 கோல்களும், சிர்மாகோ 2 கோல்களும், உத்தம் சிங், சர்தானந்த் திவாரி ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியது. டிசம்பர் 1ம் தேதி நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, பெல்ஜியம் அணியுடன் மோத உள்ளது.