ஜி.வி.பிரகாஷ்குமாரின் புதிய படம் ‘ரெபெல்’ பூஜையுடன் தொடங்கியது

தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் பேச்சிலர் திரைப்படம் இந்த வாரம் வெளியாக இருக்கிறது. மேலும் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி வரும் இடி முழக்கம் படத்திலும் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளார்.

இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் அடுத்த படத்தின் பூஜை இன்று போடப்பட்டுள்ளது. இதற்கு ரெபல் (Rebel) என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். ரெபல் தலைப்பில் ஏற்கனவே பிரபாஸ் நடிப்பில் தெலுங்கு படம் ஒன்று வெளியாகி சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.