Tamilசினிமா

ஜி.வி.பிரகாஷுக்கு கைகொடுக்கும் தனுஷ்!

ஜிவி.பிரகாஷ் நடிப்பில் ‘ஐங்கரன்’, ‘ஜெயில்’, ‘அடங்காதே’, ‘காதலிக்க யாருமில்லை’, ‘ஆயிரம் ஜென்மங்கள்’ ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. இதில் எழில் இயக்கி இருக்கும் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தில் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக ஈஷா ரெபா, சாக்‌ஷி அகர்வால், நிகிஷா பட்டேல் ஆகியோர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் சதீஷ், ஆடுகளம் நரேன், வையாபுரி, மனோபாலா, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை தயாரிப்பாளர் ரமேஷ் பி.பிள்ளை தனது அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக தயாரிக்கிறார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சி.சத்யா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், இதன் டிரைலரை நடிகர் தனுஷ் நாளை மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறித்துள்ளனர். இப்படம் டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *