Tamilசெய்திகள்

ஜம்மு காஷ்மீர் விவாகரம் தொடர்பாக இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பு விமர்சனம் – மத்திய அரசு கண்டனம்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள எல்லை நிர்ணய ஆணைய குழு, இந்த மாத தொடக்கத்தில் தனது இறுதி அறிக்கையை மத்திய அரசிடம் சமர்பித்துள்ளது.

இந்த நடவடிக்கைக்கு  இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பு விமர்சனம் செய்துள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அரசு, காஷ்மீர் குறித்த இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பின் கருத்து தேவையற்றது என தெரிவித்துள்ளது.

(பாகிஸ்தான்) ஒரு நாட்டின் உத்தரவின் பேரில் ,ஒரு தலைபட்சமாக வகுப்புவாத நிலைப்பாடுடன் செயல்படுவதை இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பு தவிர்க்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் உள் விவகாரங்கள் குறித்து இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பு மீண்டும் தேவையற்ற கருத்துக்களை தெரிவித்துள்ளது திகைப்பில் ஆழ்த்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் கடந்த காலத்தைப் போலவே, இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருக்கும் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.