சேலையில் நடிகை சாக்‌ஷி போட்ட குத்தாட்டம் – வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்‌ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.

இவரது நடிப்பில் அரண்மனை 3, சிண்ட்ரெல்லா உள்ளிட்ட படங்கள் வெளியானது. மேலும் நான் கடவுள் இல்லை, தி நைட் உள்ளிட்ட படங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.

சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை சாக்‌ஷி அகர்வால், அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வருவார். இந்நிலையில், தற்போது சேலை அணிந்து குத்தாட்டம் ஆடியிருக்கிறார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறார்கள்.