சேலம், செங்கல்பட்டில் கனமழை – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சேலம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்துக்குள் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை சுட்டிக்காட்டி தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் வரும் 15, 16-ந்தேதிகளில் வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.