செல்பி எடுத்து உயிர் விட்டவர்களின் எண்ணிக்கை! – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் ஒரு விஷயத்திற்கு அடிமையாகி உள்ளனர் என்றால் அது செல்பிதான். சாதாரணமாக வீடுகளில் எடுப்பது மட்டுமின்றி புதிய இடங்களுக்குச் சென்றும் வித்தியாசமாகவும் எடுக்கின்றனர்.

பல்வேறு சாகசங்களை செய்து, தாங்களாகவே அதனை தங்கள் போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இது ஆபத்தானதாக இருந்தால்கூட விரும்பி செய்கின்றனர்.

இதனால் பல உயிர்கள் பறிபோயின. இது குறித்த ஆய்வு ஒன்றில், கடந்த 2011 முதல் 2017 ஆண்டு வரையிலான காலத்தில் 259 பேர் செல்பியினால் இறந்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.

அதேசமயம் இதே கால கட்டத்தில் சுறா தாக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 50 மட்டுமே ஆகும். இந்தியாவில்தான் அதிகம் உயிரிழந்துள்ளனர்.

சுறாவினால் தாக்கப்பட்டு இறந்தவர்களைவிட 5 மடங்கு மக்கள் செல்பி மோகத்தால் தாக்கப்பட்டு இறந்துள்ளனர். மேலும் பெண்கள், இளைஞர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் செல்பி எடுக்கும்போது விபத்தில் சிக்கி மட்டுமே 159 பேர் உயிரிழந்தனர். அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் மிக உயரமான கட்டிடங்களில் இருந்து செல்ஃபி எடுத்து பலர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *