செர்பியா ஓபன் டென்னிஸ் – ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற ஆண்ட்ரே ரூப்லெவ்

செர்பியா ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் மோதினர்.

முதல் செட்டை ஆண்ட்ரே ரூப்லெவ் 6- 2 என எளிதில் வென்றார். இரண்டாவது சுற்றில் ஜோகோவிச் 7-6 என கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றில் சுதாரித்து ஆடிய ரூப்லெவ் 6-0 என கைப்பற்றினார்.

இறுதியில், ரூப்லெவ் 6-2, 6-7(4), 6-0 என்ற செட் கணக்கில் நம்பர் 1 வீரரான ஜோகோவிச்சை வென்று சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்த போட்டி மொத்தம் இரண்டு மணி நேரம் 29 நிமிடங்கள்
நடைபெற்றது.