செப்டம்பர் 9ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திமுக பொதுக்குழு கூட்டம் வரும் 9ந்தேதி காலை 10 மணிக்கு காணொலி மூலம் நடைபெறும் என்றும் இந்த கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாளை மறுநாள் பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும், பொருளாளராக டி.ஆர்.பாலு, எவ.வேலு, ஆ.ராசா ஆகியோரில் ஒருவர் தேர்வாக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.