சென்னை போர் நினைவுச் சின்னத்தில் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது

நீலகிரியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலத்தில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பதுடன், அரைக் கம்பத்தில் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, பிபின் ராவத்தின் மறைவுக்கு தமிழக அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கும் வகையில் சென்னை தலைமை செயலகம் அருகே உள்ள போர் நினைவுச் சின்னத்தில் அரைக் கம்பத்தில் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது .