சென்னையில் இளையராஜாவின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி

சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகரித்த பிறகு இளையராஜாவின் பாடல்களையும், இசையையும் ரசிகர்கள் கொண்டாடுவது அதிகரித்து வருகிறது. இதற்காகப் பல குழுக்கள் உருவாக்கப்பட்டுப் பாடல்களைப் பகிர்ந்து வருகிறார்கள்.

இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடக்கிறது என்றால் உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்கள் அதில் கலந்து கொள்ள விரும்புகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ஈ.வி.பி. திடலில் பிரமாண்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

அதன் பிறகு சிங்கப் பூரில் கச்சேரி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக அது தடைப்பட்டுப் போனது. பெரிய இடைவெளிக்குப் பிறகு சென்னையில் மீண்டும் இசைக் கச்சேரியை நடத்த இருக்கிறார் இளையராஜா. மார்ச் மாதம் நடக்க இருக்கும் இந்த பிரமாண்ட இசை நிகழ்ச்சிக்கு ‘ராக் வித் ராஜா’ என்று தலைப்பி டப்பட்டுள்ளது.