சூர்யா 39 படத்திற்கு இசையமைக்கும் டி.இமான்

விஸ்வாசம் பட வெற்றியை தொடர்ந்து சிவா அடுத்ததாக சூர்யாவின் 39-வது படத்தை இயக்கப்போவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் மூலம் சூர்யா – சிவா கூட்டணி முதல்முறையாக இணைகிறது.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையைமக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விஸ்வாசம் படத்தில் பணிபுரிந்த அதே குழுவினரை சூர்யா 39 படத்தில் ஒப்பந்தம் செய்ய சிவா முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் விஸ்வாசம் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த வெற்றியும், படத்தொகுப்பை கவனித்த ரூபனும் சூர்யா படத்திலும் தொடர்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சூர்யா தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு வருகிற ஆகஸ்டில் சிவா இயக்கும் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் என்ஜிகே படம் வருகிற மே 31-ந் தேதி திரைக்கு வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *