சூர்யா பட இசையமைப்பாளர் திடீர் மரணம்! – அதிர்ச்சியில் திரையுலகம்

சூர்யா நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஸ்ரீ’. ஸ்ருதிகா, காயத்ரி ஜெயராமன், விஜயகுமார், ஸ்ரீவித்யா உள்பட பலர் நடித்திருந்த இப்படத்தை புஷ்பவனம் என்பவர் இயக்கி இருந்தார். இப்படத்திற்கு டி.எஸ்.முரளிதரன் இசையமைத்திருந்தார். குறிப்பாக இப்படத்தில் இடம்பெறும் ‘வசந்தசேனா’ என்கிற பாடல் மிகப்பெரிய ஹிட்டானது.

இந்நிலையில், ஸ்ரீ படத்தின் இசையமைப்பாளர் டி.எஸ். முரளிதரன் சென்னையில் நேற்று காலமானார். இவர் ‘கோத்தம்’ என்ற இந்தி படம் உள்பட 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி உள்ளார். இசையமைப்பாளர் டி.எஸ்.முரளிதரனின் திடீர் மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.