சூர்யாவை பார்த்து பயந்த ‘சூரரைப் போற்று’ பட நாயகி

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் சூரரைப் போற்று. வரும் தீபாவளிக்கு ஓடிடியில் வெளியாகும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். எட்டு தோட்டாக்கள், சர்வம் தாள மயம் படங்களுக்கு பிறகு இவர் நடிக்கும் படம் இது.

சூர்யாவுடன் நடித்த அனுபவம் பற்றி பேட்டி ஒன்ரில் கூறிய அபர்ணா முரளி, “சூரரைப் போற்று படம் மீது எனக்கு பெரிய நம்பிக்கைக்கு காரணமே கதாபாத்திரம் தான். சூர்யா சாரின் கடின உழைப்பை பார்த்து ஆச்சர்யப்பட்டு போனேன். ஒவ்வொரு காட்சிக்கும் அவர் தயாராவது அபாரமாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு சூப்பர் ஸ்டார் எனக்கும் சரி சமமான பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்தது பெரிய விஷயம்.

இந்த பொம்மி கதாபாத்திரம் காலகட்டங்களை தாண்டி நிற்கும். சிறு வயதில் இருந்தே சூர்யா சாரின் தீவிர ரசிகை. அவருடன் நடிப்பேன் என்று நினைத்துகூட பார்க்கவில்லை. படப்பிடிப்பு தொடங்கும் முன்பு கதை படிக்கும் காலகட்டத்தில் அவரை பார்த்து பயந்தேன். படப்பிடிப்பு தளத்தில் ரொம்ப கூலாக இருந்தார். சூர்யா சாரின் படத்தில் நடிப்பதால் அவரது ரசிகர்களின் ஆதரவும் அதிகமாக இருக்கிறது.” என்று தெரிவித்தார்.