சீன வெளியுறவுத் துறை அமைச்சர் டெல்லி வந்தடைந்தார்

கிழக்கு லடாக்கில் இந்தியா, சீனா இடையே மோதல் ஏற்பட்டு 2 ஆண்டுகள் ஆகிறது.

இந்நிலையில், சீன வெளியுறவுத் துறை மந்திரி வாங் யீ நேற்று இரவு டெல்லி வந்தடைந்தார். இரு நாடுகளுக்கு இடையிலான மோதலுக்கு பின் சீன அதிகாரியின் முதல் உயர்மட்ட பயணமாக சீன வெளியுறவு மந்திரியின் பயணம் அமைந்துள்ளது.

டெல்லி வந்தடைந்த வாங் யீ, இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை இன்று சந்திக்க உள்ளார்.