சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 62 வருடங்கள் சிறை தண்டனை – கேரள நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு

கேரள மாநிலம் இடுக்கி பகுதியை சேர்ந்த 24 வயது வாலிபர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் சிறுமி கர்ப்பிணியானார்.

இதுபற்றி சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர். அவர் மீதான வழக்கு இடுக்கி போக்சோ விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது.

நேற்று இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பு கூறினார். அதில் மைனர் பெண்ணை கர்ப்பிணியாக்கியதற்கு 40 ஆண்டுகள் தண்டனையும், அவரது விருப்பத்துக்கு மாறாக பலாத்காரம் செய்ததற்கு 20 ஆண்டுகளும், பாலியல் வன்கொடுமை செய்ததற்கு 2 ஆண்டுகளும் என மொத்தம் 62 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

இது தவிர அபராதமாக ரூ.1.55 லட்சம் செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறியுள்ளார். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 62 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.