சிம்புவுக்கு தங்கையாக நடிக்கும் நந்திதா ஸ்வேதா

சிம்புவின் 46-வது படத்தை மாதவ் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. சுசீந்திரன் இயக்கும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு திரு ஒளிப்பதிவு செய்கிறார். இது, பக்கா கமர்ஷியல் படமாக உருவாகிறது. இந்தப் படத்துக்காக சிம்பு உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்துக்கு மாறியுள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்து பொங்கல் பண்டிகைக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தில் சிம்புவின் தங்கை கதாபாத்திரத்தில் நந்திதா நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே அட்டகத்தி, புலி, உள்குத்து, எதிர்நீச்சல் போன்ற படங்களில் நடித்துள்ளார்.