சர்வதேச மகளிர் தினம் – கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து

 

சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்களின் மகத்தான சாதனைகளை கொண்டாடும் வகையில் உலக அளவில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த நிலையில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில், உலக அளவில் பெண்களின் மகத்தான சாதனைகளைப் போற்றும் வகையில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களுக்கான அரசியல், சமூக, பொருளாதாரப் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டியது நம் அனைவரின் கடமையாகும் என கூறியுள்ளார்.