‘சர்தார்’ படத்தை பாராட்டிய சீமான்
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்த படம் ‘சர்தார்’. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்திருந்தார். மேலும், ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். ‘சர்தார்’ திரைப்படம் அக்டோபர் மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்திற்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ‘சர்தார்’ திரைப்படம் பார்த்த நடிகர் சீமான், “இதுபடம் என்று சொல்ல முடியாது, இது ஒரு படிப்பினை. இந்தக் கருத்தை வலியுறுத்தி நான் பேசியிருக்கிறேன். தண்ணீர் மிகப்பெரிய வியாபாரப்பொருளாக மாற்றப்பட்டுள்ளது. உலக உயிர்களின் உயிர் உடைமையை சந்தைப்பொருளாக மாற்றியதிலிருந்து எவ்வளவு பெரிய பேராபத்தை நோக்கிய பயணித்துக்கொண்டிருக்கும் என்பதை புரிய வரும். இந்தப்படம் அதை மிகவும் ஆழமாக விளக்கிச்சொல்கிறது.
மித்ரன் தரமான படத்தை உருவாக்கியிருக்கிறார். அவரிடம் சமூக பொறுப்புடன் ஒரு பார்வை இருக்கிறது. சர்தார் ஒரு சிறந்த படைப்பு” என்று தெரிவித்துள்ளார்.