சர்க்கரை மற்றும் இதய நோய்களில் இருந்து முழு விடுதலை! – அதிசயம் நிகழ்த்தும் ஐவோ (AIWO) ஆரோக்கிய மையம்

பல்வேறு துறைகளில் இந்தியா வேகமாக முன்னேற்றம் கண்டு வருவதுபோல், சர்க்கரை மற்றும் இதய நோய்களிலும் வேகமாக முன்னேறி வருகிறது. தமிழகம் உள்ளிட்ட இந்திய மாநிலத்தவர்கள் என்றாலே அவர்களுக்கு 30 வயதுக்குள் சர்க்கரை நோய் வருவது இயல்பு என்றும், அதை தொடர்ந்து இதய நோய் ஏற்படுவது சாதாரணமான ஒன்று என்றும், மற்ற நாட்டினர் கூறும் அளவுக்கு இங்கு சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறவர்கள் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள்.

அதேபோல், சர்க்கரை நோய் வந்து விட்டால், அவர்கள் வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வதோடு, மனதுக்கு பிடித்த உணவுகளை சாப்பிடாமல் வாழவேண்டும், என்ற நிலையும் உள்ளது. அப்படி வாழ்ந்தாலும், அவர்களின் உடல் மற்றும் உடலுறுப்புகள் சீராக இயங்காமல், அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போவதும், உடலுறுப்புகள் பாதிப்படைவதும் தொடர்கதை போல் நீண்டுக்கொண்டே போகிறது. மொத்தத்தில், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆபத்து என்பது மிக அருகில் இருக்கும், என்ற மோசமான நிலை தான் தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் காணப்படுகிறது.

ஆனால், இத்தகைய ஒரு நிலையை மாற்றி, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதில் இருந்து முழுமையான விடுதலை பெற்று தருவதோடு, இதய நோய் மற்றும் உடல் பருமன் ஆகியவற்றில் இருந்தும் எளிதில் விடுபடக்கூடிய சிகிச்சை முறையை பல வருட ஆய்வுகளுக்கு பிறகு செயல்படுத்தி வெற்றி பெற்றுள்ளது ஐவோ ஆரோக்கிய மையம். (AIWO Wellness Center)

மதுரையின் பிரபலமான மருத்துவமனையான அஷிதா மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர்.சி.என்.இளங்குமரனின் பல வருட முயற்சியில் உருவாக்கப்பட்ட இந்த ஐவோ (AIWO) சிகிச்சை முறையினால் பலர் சர்க்கரை நோயில் இருந்து முழுவதுமாக விடுதலை பெற்று, மருந்து மாத்திரைகள் இன்றி, ஆரோக்கியம் மற்றும் வலிமையான உடலமைப்பு என்று அதிசய வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.

இப்படி ஒரு சிகிச்சையா!, என்று மற்றவர்களை போல் நாமும் ஆச்சரியப்பட்டதோடு மட்டும் அல்லாமல், இது பற்றி அறிய டாக்டர்.இளங்குமரன் அவர்களை சென்னையில் உள்ள ஐவோ மையத்தில் சந்தித்தோம்.

ஐவோ ஆரோக்கிய மையத்தில் நுழையும் போதே, ஏதோ ஒரு மனமகிழ் மன்றத்திற்குள் நுழையும் ஒரு உணர்வை கொடுக்கிறது. ஆஹா…தவறுதலான முகவரிக்கு வந்துவிட்டோமோ, என்று யோசிக்கும் போது, கம்பிரமான தோற்றம் மற்றும் குரலோடு நம்மை வரவேற்றார் டாக்டர்.இளங்குமரன்.

இது மருத்துவமனையா சார்? என்று ஆச்சரியத்துடன் அவரிடம் கேட்க, இது மருத்துவமனை இல்லை சார். ஆரோக்கிய மையம். இங்கு வழங்குவது நோய்களுக்கான சிகிச்சை அல்ல முழு உடல் மற்றும் மனதுக்கான ஆரோக்கியம், என்று சிரித்துக்கொண்டே கூறியவர், ஐவோ சிகிச்சைப்பற்றி மேலும் கூறியது இதோ,

ஐவோ (AIWO) என்பது ஜப்பானிய வார்த்தை, இதன் பொருள் ’ஐ லவ் மை செல்ஃப்’. (I Love My Self) ஒவ்வொரு மனிதரும் நேசிக்க கூடிய முக்கியமனா விஷயம் அவங்களுடைய உடல். அந்த வகையில், ஒவ்வொருவரும் எப்போது தங்களது உடல் முழு ஆரோக்கியமாக இருக்கிறது, என்று உணர்கிறார்களோ அவர்களுடைய வாழ்க்கை இயல்பாகவே மகிழ்ச்சியாகி விடுவதோடு, அவர்கள் ஈடுபடும் செயல்களில் தொடர் வெற்றிகளையும் பெறுவார்கள். அதாவது, உடல் வலிமையாக இருக்க மனம் அமைதியாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும். அதற்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது மிக முக்கியம். ஆனால், தற்போதைய நவீன மற்றும் வேகமான உலகத்தில் ஒவ்வொரு மதினரும் ஏதாவது ஒரு வகையில் மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுகிறார்கள். மன உளைச்சல் என்று சாதாரணமாக கூறிவிடுகிறோம். ஆனால், இதனால் நம் உடல் நிலை மிக மோசமான நிலைக்கு சென்றுக்கொண்டிருப்பதை நாம் உணர்வதில்லை. அதே சமயம், இத்தகைய வேகமான உலகில் மன உளைச்சல் என்பது நாம் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டாலும், அத்தகைய மன உளைச்சலில் இருந்து எளிதில் விடுபடுவதோடு, அதற்குள் நாம் சிக்காமல் நம் வாழ்க்கையை ஆரோக்கியமானதாக மாற்றிக்கொள்ள முடியும்.

மன உளைச்சலுக்கு நான் முக்கியத்துவம் கொடுப்பதற்கு காரணம், இந்த ஒரு வார்த்தை தான் பல பிரச்சனைகளுக்கு வழிகாட்டியாக இருக்கிறது. இதன் மூலம் நமது உடல் இரத்த கொதிப்பை அதிகரிப்பதோடு, சர்க்கரையின் அளவை உயர்த்துவதற்கான காரணியையும் உருவாக்குகிறது. இவை இரண்டினாலும் நம் உடலில் உள்ள இரத்த குழாய்களில் கொழுப்பு படியும் தன்மையும் கூடுவிடுகிறது. இப்படி ஒவ்வொரு பிரச்சனையாக கூடிக்கொண்டே போக, இறுதியில் நாம் மருந்து மாத்திரைகளின் கைதியாகி விடுகிறோம். பிறகு, ஆரோக்கியமற்ற உடல் நிலையோடு, மகிழ்ச்சியற்ற வாழ்க்கையை தொடர வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம்.

இப்படி ஒரு வாழ்க்கை ஏன்?, வசதி படைத்தவர்கள் கூட முழுமையான சந்தோஷம் இல்லாமல் வாழ்கிறார்களே ஏன்? போன்ற கேள்விகள் என் மனதில் எழுந்தது. இதனை மாற்ற என்ன செய்ய வேண்டும், என்று நான் சிந்தித்ததோடு, இதனை மாற்றும் ஒரு வழியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு, பல வருட சோதனைக்குப் பிறகு தற்போது அது வெற்றியோடு செயல்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.

கொரோனா என்ற கொடிய நோய், உலகம் முழுவதும், ஒவ்வொரு மனிதருக்கும் ஆரோக்கியமான உடல் நிலை எவ்வளவு அவசியம், என்பதை மிக ஆழமாக உணர்த்தியுள்ளது. அதனால், நம் உடல் நிலையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதோடு, சர்க்கரை மற்றும் இதய நோய்கள் வராமல் தடுப்பது எப்படி? என்ற கேள்விக்கான ஒரு விடையாக ஐவோ சிகிச்சை முறை இருக்கும்.

ஐவோ சிகிச்சை முறை, மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சை முறை போல் இல்லை, அதனால் தான் நாங்கள் ஆரோக்கிய மையம், என்று சொல்கிறோம். எங்கள் சிகிச்சை முறை பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் அல்ல, பாதிக்கப்படாமல் ஆரோக்கியத்துடனும், வலிமையான உடலமைப்போடும் வாழ நினைக்கும் அனைவருக்குமான ஒரு ஆரோக்கியமான வழியாகும்.

எனக்கு எதுவும் இல்லை, நான் நன்றாக தான் இருக்கிறேன், என்று பலர் சொல்வார்கள். ஆனால், அவர்களுடைய இரத்தத்தை முழுமையாக பரிசோதனை செய்யும் போது, அவர்களின் உடல் நிலை மோசமாக இருக்கும். காரணம், அவர்களுடைய இரத்தம் அனைத்து உண்மைகளையும் சொல்லிவிடும். அப்படி ஒரு முழுமையான பரிசோதனையை நாங்கள் முதலில் செய்வோம். அதாவது, 180 வகையான பரிசோதனைகளை செய்வோம். அதன் முடிவுகள் வந்த பிறகு, அதை நவீன தொழில்நுட்பம் மூலம், அவர்களின் உடல் நிலை எத்தகைய நிலையில் இருக்கிறது. ஒருவேளை அவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அவருக்கு இதய நோய் எப்போது ஏற்படும் என்பதையும், இதய நோய் பாதிப்பால் ஏற்கனவே அவதிப்பட்டவர்கள் என்றால், அவர்களின் உடல் நிலையின் தன்மை ஆகியவற்றுடன், உடல் எடை மற்றும் அதனால் எதிர்காலத்தில் அவர்கள் சந்திக்க கூடிய பிரச்சனைகள், என அனைத்தையும் சுமார் 40 பக்கங்கள் கொண்ட ஒரு முழுமையான தகவலாக தயார் செய்து விடும்.

அந்த தகவலின் அடிப்படையில், அவர்களுக்கான சிக்கிசைகளை தொடங்குவோம். அதாவது, அவர்களின் உணவு முறை மற்றும் அவர்களுக்கு எத்தகைய ஊட்டச்சத்து குறைவாக இருக்கிறதோ அதனை அதிகரிப்பதற்கான சில இயற்கை உணவுகள் மூலம் தயாரிக்கப்படும் மருந்துகளை வழங்குகிறோம். உணவு முறை என்றதும் பயப்பட வேண்டாம். நீங்கள் மனதுக்கு பிடித்த உணவை திருப்தியாக சாப்பிடும் ஒரு எளிமையான உணவு முறையை நாங்கள் வடிவமைத்துள்ளோம். அதே சமயம் உங்கள் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

மேலும், எங்களது ஐவோ முறையில் சிகிச்சை பெற்ற சர்க்கரை நோயாளிகள் பலர் மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதை நிறுத்திவிட்டு சகஜமான வாழ்க்கைக்கு திரும்பியிருப்பதோடு, மரபனு வழியில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட இருந்தவர்கள் அதில் இருந்து மீட்டு ஆரோக்கியமானவர்களாக மாறியிருக்கிறார்கள்.

இப்படிஒரு சிகிச்சை முறையை தமிழகத்தில் நாங்கள் அறிமுகப்படுத்தினாலும், வெளிநாடுகளில் இவை ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டு தான் வருகிறது. குறிப்பாக சினிமா நட்சத்திரங்கள் இத்தகைய வழிமுறையை பின்பற்றி தான் ஆரோக்கியமான உடல் நிலையோடு இருக்கிறார்கள். ஷாருக்கான், நாகர்ஜுனா, விஜய் உள்ளிட்ட பல சினிமா நடிகர்கள் 50 வயதை தாண்டியும், இளைஞர்களாக துள்ளி விளையாடுவதற்கு இத்தகைய வழிமுறை தான் காரணம். ஆனால், இத்தகைய வழியை ஒவ்வொரு மனிதரும் பின்பற்றினால் அவர்களுடைய உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.” என்று மனம் நிறைவாக பேசினார் மருத்துவர் சி.என்.இளங்குமரன்.

மருத்துவராக இருந்தாலும், மருந்து மாத்திரைகள் இல்லாத மற்றும் மகிழ்ச்சிகரமான ஒரு வாழ்க்கையை மக்கள் வாழ வேண்டும், என்று நினைத்ததோடு மட்டும் இன்றி அதை வெற்றிகரமாக செயல்படுத்திய டாக்டர்.சி.என்.இளங்குமரன் அவர்களுக்கு வாழ்த்துகளை கூறிகொண்டு விடைபெற்றதோடு, ஐவோ ஆரோக்கிய மையத்தில் ஆலோசனை பெறுவதற்கான நேரத்தையும் பெற்றுக்கொண்டு விடைபெற்றோம்.

-ஜெ.சுகுமார்