சம்பளத்தை குறைத்த காஜல் அகர்வால்

காஜல் அகர்வாலுக்கு தமிழ், தெலுங்கு என 2 திரைத்துறைகளிலும் நல்ல மார்க்கெட் இருக்கிறது. கவர்ச்சியுடன் கனமான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அவர் சமீபத்தில் நடித்த கோமாளி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று, இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அடுத்து பாரிஸ் பாரிஸ் ரிலீசாக இருக்கிறது.

சாதாரணமாக ஒரு தெலுங்கு படத்தின் சம்பளம் என்று பேசினால், அனைத்து சலுகைகளுக்கு பிறகு காஜல் அகர்வால் ரூ.1.75 கோடி வரை வாங்குகிறார் என்று சொல்லப்படுகிறது. மற்ற அனைத்து செலவுகளுடன், மொத்த ஊதியம் 2 கோடியை அவருக்கு கொடுக்கிறார்களாம். காஜல் அகர்வால் இந்தியில் மும்பை சாகா திரைப்படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில் நடிகர் ஜான் ஆபிரகாமும் நடித்து வருகிறார். இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு காஜல் அகர்வாலுக்கு ரூ.30 லட்சம் மட்டுமே கொடுத்ததாக தகவல்கள் வெளிவருகின்றன. தமிழ், தெலுங்கில் நல்ல சம்பளம் வாங்கும் காஜல் இந்தி படம் என்பதால் தனது சம்பளத்தை கணிசமாக குறைத்து இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *