சமுத்திரக்கனிக்கு ஜோடியான வனிதா விஜயகுமார்

பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘அந்தாதூன்’. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர். ‘அந்தகன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இதற்காக அவர் பிரத்யேகமாக பியானோ பயிற்சி பெற்றுள்ளார்.

மேலும் சிம்ரன், வனிதா, சமுத்திரகனி, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் தான் நடிக்கும் கதாபாத்திரம் குறித்த தகவலை நடிகை வனிதா வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சமுத்திரகனிக்கு, மனைவியாக நடிப்பதாக வனிதா தெரிவித்துள்ளார்.