கோவாவில் நடிகை ரைசா வில்சன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமடைந்து, பிறகு சினிமாவில் வலம் வந்த பலரில் ரைசா வில்சனும் ஒருவர். பிக்பாஸ் சீசன் 1-இல் பங்கேற்று பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். துருவிக்ரம் நடித்த வர்மா படத்திலும் நடித்தார். இவர் தற்போது தி சேஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரைசா அவரது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவது வழக்கம். அதன்படி, தற்போது தனது நண்பர்களுடன் கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ள ரைசா வித்யாசமான உடையில் கோவில் வலம் வரும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.