கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் மு.க.ஸ்டாலின்

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது. முதல்-அமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதை தொடர்ந்து 34 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.

இதையடுத்து முதல்வராக பதவியேற்றதும் கோபாலபுரம் புறப்பட்டு சென்ற மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கோபாலபுரம் இல்லத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் படத்திற்கு மரியாதை செலுத்தினார். பின்னர் தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார்.