கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் நடிகை பூஜா ஹெக்டே

தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பின்னர் தெலுங்கு, இந்தி படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையானார். தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே கொரோனா முதல் தடுப்பூசி போட்டு இருப்பதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்திருக்கிறார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நடிகை பூஜா ஹெக்டே, கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதன்பின் சிகிச்சைக்குப் பிறகு தொற்றில் இருந்து மீண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.