Tamilசெய்திகள்

கொரோனா அச்சம் – மும்பை, ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் கோவில்கள் மூடப்பட்டது

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.

மராட்டியம், டெல்லி, கேரளா, ராஜஸ்தான் மாநிலங்கள் உள்பட நாடு முழுவதும் 120 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சளி, காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறி இருந்தால் உடனே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவுவதை தடுக்க பல்வேறு மாநில அரசுகளும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. காய்ச்சல், சளி உள்ளிட்ட நோய் அறிகுறி இருப்பவர்கள் கோவிலுக்கு வரவேண்டாம் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

சபரிமலை கோவிலுக்கு வெளிமாநில பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மராட்டிய மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து மும்பையில் பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவில், மும்பாதேவி கோவில், மகாலட்சுமி ஆலயம், இஸ்கான் கோவில் ஆகியவை இன்று முதல் வருகிற 31-ந்தேதி வரை மூடப்படுவதாக கோவில் நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.

ராஜஸ்தானில் உள்ள மகாந்திப்பூர் பாலாஜி கோவில் மூடப்பட்டது. கவுகாத்தியில் பிரசித்தி பெற்ற உஜ்ஜைனி கோவில் மற்றும் கமாக்யா கோவில்களில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *