‘கே.ஜி.எப்’ 3ம் பாகம் வருமா? – ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பு

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு யாஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கே.ஜி.எஃப் 2’ . முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இப்படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் உருவாக்கி இருந்தார். இப்படத்தில்
யாஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தார்கள்.

இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகமுழுவதும் வெளியானது. ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்று வரும் இப்படத்தின் முதல் நாள் வசூல்
இந்தியா முழுவதும் ரூ.134.5 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் மூன்றாம் பாகத்தை ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருக்கின்றனர். கே.ஜி.எஃப் 2ம் பாகம் படத்தின் இறுதியில் பாகம் 3ன் அறிவிப்பை படக்குழு அறிவித்திருந்தனர். கே.ஜி.எஃப் 2
வெற்றியில் மூழ்கியிருந்த ரசிகர்கள் அதிலிருந்து மீள்வதற்குள் இந்த அறிவிப்பு வெளியானதால் ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்போடு அதன் அடுத்த பாகத்தை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதனை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.