கேலி செய்த நெட்டிசன்களுக்கு பதில் அளித்த விஜய் தரப்பு

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்றது. இதில் பிரபலங்கள் பலரும் வாக்களித்தனர். அந்த வகையில் நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க சிவப்பு நிற காரில் வந்தார். அவரது இல்லத்தில் இருந்தே ரசிகர்கள் புடை சூழ வந்த விஜய், நீலாங்கரை வேல்ஸ் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

அவர் பயணித்து வந்த சிவப்பு நிற காருக்கு இன்சூரன்ஸ் செலுத்தவில்லை அதில் தான் விஜய் வாக்களிக்க வந்தார் என்று நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வந்தனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் விஜய் தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. விஜய் வந்த காருக்கு வருகிற மே 28, 2022 ஆண்டு வரை இன்சூரன்ஸ் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.