கேப்டன் பதவியை கைவிடும் கோலியின் பிளான் இது தான் – பிராட் ஹாக் கருத்து

டி20 இந்திய அணியின் கேப்டன் மற்றும் ஆர்சிபி அணியின் கேப்டன் போன்ற பதவிகளில் இருந்து விராட் கோலி விலகி உள்ளார். கேப்டன் பதவிகளில் இருந்து விலகினாலும் வீரராக அணியின் வெற்றிக்கு பாடுபடுவேன் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

விராட் கோலி தற்போது டெஸ்ட் போட்டியில் 27 சதங்கள், ஒருநாள் போட்டியில் 43 சதங்கள் என மொத்தம் 70 சதங்கள் அடித்துள்ளார்.

இந்நிலையில், கேப்டன் பதவியை உதறியுள்ள இந்திய கேப்டன் விராட் கோலி, தெண்டுல்கரின் 100 சதங்கள் அடிக்கும் சாதனையை சமன்செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 100 சதங்கள் விளாசிய ஒரே வீரர் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர். அவர் டெஸ்டில் 51 சதங்களும், ஒரு நாள் போட்டியில் 49 சதங்களும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.