கேப்டனுக்கு ஆலோசனை வழங்கிய ஸ்டீவ் ஸ்மித்! – கண்டனம் தெரிவித்த முன்னாள் வீரர்
ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்றது. இந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது, கேப்டன் டிம் பெய்னிடம் ஆஃப் சைடு பீல்டிங் குறித்து ஸ்டீவ் ஸ்மித் ஆலோசனை வழங்கினார்.
ஸ்மித் ஆலோசனை வழங்கியதை பார்க்க எனக்கு பிடிக்கவில்லை என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான இயன் சேப்பல் கடுமையாக சாடியுள்ளார்.
இதுகுறித்து ஸ்மித் கூறுகையில் ‘‘ஸ்மித் சில் பீல்டிங் எல்லையை மாற்றியமைத்ததை பார்க்க விரும்பவில்லை. அவர் டிம் பெய்னிடம் சென்று, ஆஃப்-சைடு பீல்டிங் செய்வது குறித்து ஆலோசனை வழங்க முற்பட்டார்.
ஆனால், டிம் பெய்ன் ஸ்மித் விரும்பியபடி அந்த வீரரை செல்ல அனுமதித்தாரா? என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஸ்மித் அந்த வீரரை நகர்த்த விரும்பினார். இதை நான் முற்றிலும் வெறுக்கிறேன்’’ என்றார்.