Tamilவிளையாட்டு

கேன் வில்லியம்சன் தனித்துவமான வீரர் – விராட் கோலி புகழ்ச்சி

சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது நட்சத்திர வீரர்களாக திகழும் பெரும்பாலான வீரர்கள் (விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஜடேஜா, டிம் சவுத்தி, டிரென்ட் போல்ட், கோரி ஆண்டர்சன், ஸ்டீவ் ஸ்மித், ஜேம்ஸ் பேட்டின்சன், ஹசில்வுட்) 2008-ம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற U-19 உலக கோப்பையில் விளையாடியவர்கள்.

அதேபோல் 2010-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பயைில் (ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், பட்லர்) இடம் பிடித்தவர்களும் நட்சத்திர வீரர்களாக உள்ளனர்.

2008-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியிருந்தது. அரையிறுதியில் நியூசிலாந்து இந்தியா வீழ்த்தியிருந்தது. அப்போது நியூசிலாந்து அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் இருந்தார்.

விராட் கோலி 235 ரன்கள் அடித்து முக்கியத்துவம் பெற்றாலும், கேன் வில்லியம்சன்தான் தனித்துவமான வீரர் என்று விராட் கோலி 2008 உலக கோப்பையை நினைவு கூர்ந்து தெரிவித்துள்ளார்.

மேலும் U-19 உலக கோப்பை குறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘கேன் வில்லியம்சனுக்கு எதிராக விளையாடியதை நான் நினைத்து பார்க்கிறேன். அவர் அந்த அணியில் தனித்துவமான வீரராக திகழ்ந்தார். மேலும் அவரது பேட்டிங் திறமை அந்த தொடரில் மற்ற வீரர்களை விட மிகவும் வித்தியாசமாக இருந்தது.

இந்தத் தொடரில் விளையாடிய கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித் போன்ற ஏராளமான வீரர்கள் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் நட்சத்திர வீரர்களாக மாறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

எனது கிரிக்கெட்டில் அந்த உலக கோப்பை மிகப்பெரிய மைல்கல். எங்களுக்கு சிறப்பான கிரிக்கெட் கேரியரை கட்டமைக்க மிகச் சிறந்த அடித்தளமாக அமைந்தது. ஆகவே, எனது மனது மற்றும் இதயத்தில் நீங்கா இடம் பிடித்துவிட்டது’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *