குழந்தையின் பெயரை அறிவித்த கோலி – அனுஷ்கா ஜோடி

இந்திய அணி கேப்டன் விராட் கோலி – பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோருக்கு கடந்த மாதம் 11-ந்தேதி பெண் குழந்தை பிறந்தது. அவர்கள் பிறந்த உடன் குழந்தையை வெளியுலகத்திற்கு காட்டவில்லை. தனிமனித உரிமை கடைபிடிக்கப்பட வேண்டும் வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். இதனால் மீடியாக்கள் அவர்கள் பின்தொடரவில்லை.

இந்த இந்நிலையில் அனுஷ்கா ஷர்மா டுவிட்டர் பக்கத்தில் விராட் கோலி, குழந்தையுடன் இருக்கும் படத்தை வெளியிட்டு, மகளின் பெயர் வாமிகா, எனவும் தெரிவித்துள்ளார்.