குழந்தைகள், மாணவர்கள் தற்கொலையை தடுக்க விஷால் விழிப்புணர்வு பிரச்சாரம்!

குழந்தைகள், மாணவர்கள் மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்வதை தடுக்க நடிகர் விஷால் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் பேசி இருப்பதாவது:-

உங்களுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டிருக்கிறது, விளையாட முடியவில்லை, நடக்க முடியவில்லை, ஏன்? நிற்கக்கூட முடியவில்லை. என்ன முடிவெடுப்பீர்கள்? முதலில் நாம் செய்யும் வி‌ஷயம் மருத்துவரை அணுக வேண்டும் என்று தானே? ஆனால் உளவியல் பிரச்சினைக்கு நாம் மருத்துவரை பற்றி சிந்திப்பதில்லை.

இந்தியாவில் ஒவ்வொரு 1 மணி நேரத்திற்கும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொள்கிறார். நம் வீட்டு குழந்தைகள், அண்டை வீட்டு குழந்தைகள், நாம் நேசிக்கும் குழந்தைகள் மற்றும் உதவி தேவைப்படும் குழந்தைகள் ஆகியோர்களுக்கு நம்மால் உதவ முடியும். மனநல குறைகளுக்கு சிகிச்சை உண்டு. அவற்றை முற்றிலும் தடுக்கவும் முடியும்.

சரியான நேரத்தில் உதவுவது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். குழந்தைகளின் நல்ல எதிர்காலத்திற்கு வழி வகுக்கும். எப்போதுமே குழந்தைகள் சில காரணங்களால் அவர்களின் பிரச்சினைகளை பெற்றோரிடம் சொல்வதில்லை. அதற்காகதான் ‘தி திஷா ஹெல்ப்லைன்’ இருக்கிறது. குழந்தைகளின் கவலைகளுக்கு ஆதரவளிக்கும் ஒரே நோக்கத்தோடு செயல்படுகிறது.

ஆகையால் நீங்கள் துன்பத்தில் இருந்தாலோ, அல்லது வேறு ஒருவர் துன்பத்தில் இருப்பதை அறிந்தாலோ திஷாவின் இலவச எண்ணை அழைக்கு மாறு கேட்டுக் கொள்கிறேன். அவர்களுக்கு சரியான நேரத்தில் உதவி கிடைக்க உறுதி செய்வார்கள்.

இவ்வாறு விஷால் பேசி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *