காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற தீவிரவாடி சுட்டுக்கொலை

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிப்பதும், அதை இந்திய ராணுவ வீரர்கள் முறியடிப்பதும் வாடிக்கையான நிகழ்வாக இருந்து வருகிறது.

இந்தநிலையில் காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டம், எல்லை கட்டுப்பாட்டு வழியாக பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவ முயன்றனர். இதை கண்காணித்த இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் பயங்கரவாதிகளின் ஊடுருவலை முறியடித்தனர்.

அவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில் ஒரு பயங்கரவாதி குண்டு பாய்ந்து பலியானார்.

அவனது உடல் அருகே இருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கிகளை இந்திய ராணுவ வீரர்கள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல்வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.