காஷ்மீரில் பேருந்து விபத்து – 33 பேர் பலி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஸ்த்வார் மாவட்டம் கேஷ்வானில் இருந்து கிஸ்த்வார் நோக்கி இன்று காலையில் ஒரு மினி பேருந்து சென்றுகொண்டிருந்தது. கிஸ்த்வாரை நெருங்கியபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, மலைப்பாதையில் உருண்டு பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து கடுமையாக சேதம் அடைந்தது. பயணிகள் இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடினர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 33 பேர் பலியானதாகவும், 22 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் துணை கமிஷனர் தெரிவித்துள்ளார்.