காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் – பாதுபாப்பு படை வீரர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரின் சுன்ஜ்வான் பகுதியில் உள்ள ராணுவ முகாமை குறிவைத்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

கண்ணிமைக்கும் நேரத்தில் தாக்குதல் நடத்திவிட்டு பயங்கரவாதிகள் தப்பிச் சென்றுவிட்டனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒரு வீரர் உயிரிழந்தார். மேலும் 3 பேர்
காயமடைந்தனர்.

இதையடுத்து அப்பகுதி முழுவதையும் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து, பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.