கார்த்தி படத்தின் புதிய அப்டேட் – ரசிகர்கள் மகிழ்ச்சி

தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சுல்தான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக ஒரு நல்ல படமாக பேசப்பட்டது. இதனை தொடர்ந்து இயக்குனர் மணி ரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் படத்திலும், முத்தையா இயக்கும் விருமன் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

இயக்குனர் மித்ரன் இயக்கும் சர்தார் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் இருவரும் நடிக்கின்றனர். ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ தயாரிக்கும் இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் மோஷன் போஸ்டர் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. சர்தார் திரைப்படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்ப்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களுக்கு புதிய அப்டேட்டை கார்த்தி கொடுத்துள்ளார்.

‘சர்தார்’ படத்தின் இரண்டாவது லுக் மற்றும் ரிலீஸ் தேதியை கார்த்தி அறிவித்துள்ளார்.இப்படம் தீபாவளியை முன்னிட்டு உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக கார்த்தி சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதன் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.