காமன்வெல்த் விளையாட்டு போட்டி – பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா இன்று மோதல்

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முதலாவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. பர்மிங்காம் 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நேற்று இரவு கோலாகலமாக தொடங்கியது.

இதில் இன்று நடைபெறும் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வலுவான ஆஸ்திரேலியாவை (மாலை 3.30 மணி) எதிர்கொள்கிறது.

அதே போல், பெண்கள் ஹாக்கி போட்டியில் ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் கானாவை (மாலை 6.30 மணி) சந்திக்கிறது. டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன் போட்டிகளில் இந்திய அணிகள் களம் காணுகிறது. நீச்சல், ஸ்குவாஷ், குத்துச்சண்டை போட்டிகளில் இந்திய வீரர்கள் கால் பதிக்கிறார்கள்.