‘காந்தாரா’ படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகிறது

கடந்த வருடம் வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இது கன்னடத்தில் வெற்றி பெற்றதால் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். இப்படம் அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது.

ரூ.8 கோடி செலவில் தயாரான காந்தாரா ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து இப்பம் உருவாகியிருந்தது. ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகைகள் படத்தை பாராட்டினர்.

இந்நிலையில், ‘காந்தாரா 2’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகவுள்ளதாகவும் இது சீக்வலாக இல்லாமல், ப்ரீக்வலாக உருவாக உள்ளதாகவும் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், ‘காந்தாரா 2’ திரைப்படம் மழைக்காலங்களில் எடுக்க வேண்டிய தேவையுள்ளதால் வருகிற ஜூன் முதல் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.