Tamilசெய்திகள்

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் அத்திவரதரை தரிசிப்பதற்கான நேரம் அதிகரிப்பு

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த 1-ந்தேதி முதல் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். நேற்று 9-வது நாளாக மாம்பழ நிற பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியில் சென்று அத்திவரதரை தரிசித்தனர்.

நேற்று ஒரே நாளில் அத்திவரதரை 1 லட்சத்துக்கும் அதிகமானோர் தரிசனம் செய்தனர்.

காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்கலாம் என்று இருந்த நிலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இனி மேல் அத்திவரதரை அதிகாலை 4½ மணி முதல் இரவு 10 மணி வரை தரிசிக்கலாம் என்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளதால் அடிப்படை வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *